TNPSC Thervupettagam

மஞ்சள் இராணுவ சேமிப்புக் கணக்கு

March 25 , 2018 2438 days 794 0
  • ஈக்யூடாஸ் சிறு நிதியியல் வங்கி, மஞ்சள் இராணுவ சேமிப்புக் கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் பகுதியான சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து செயல்படுவதன் மூலம் தன்னுடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இந்தக் கணக்கைத் தொடங்கியுள்ளது.

  • இந்த மஞ்சள் இராணுவ சேமிப்புக் கணக்கு ரூ. 10 லட்சத்திற்குக் குறைவாக இருப்பு வைத்திருக்கும் கணக்குகளுக்கு ஆண்டிற்கு 6% வட்டியும், ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பு வைத்திருக்கும் கணக்குகளுக்கு ஆண்டிற்கு5% வட்டியும் வழங்கும்.

ஈக்யூடாஸ்

  • ஈக்யூடாஸ் சிறுநிதி வங்கியென்று ஒரு நுண்நிதி கடனளிக்கும் வங்கியாக (Micro finance lender) 2007 ஆம் ஆண்டு ஈக்யூடாஸால் நிறுவப்பட்டது.
  • இதன் தலைமையகம் சென்னையிலுள்ளது.
  • ஈக்யூடாஸ் சிறுநிதி வங்கியானது சுதந்திரத்திற்குப் பிறகான தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தனியார் துறை வங்கியாகும்.
  • பிப்ரவரி 4, 2017 முதல் இவ்வங்கி பட்டியலிடப்பட்ட வங்கியாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் பட்டியலிடப்பட்ட வங்கி என்பது, RBI சட்டம் 1934ன் பட்டியல்  - IIல் வகைப்படுத்தப்பட்ட வங்கிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்