TNPSC Thervupettagam

மஞ்சள் கடல் - போஹாய் வளைகுடா

August 4 , 2024 111 days 155 0
  • மஞ்சள் கடல்-போஹாய் வளைகுடாவை ஒட்டி காணப்படும் சீனாவின் வலசை போதல் பறவைகள் சரணாலயங்கள் (கட்டம் II) ஆனது, யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இது ஹெபே, ஷான்டாங் மற்றும் லியோனிங் மற்றும் பிற மாகாணங்கள் மற்றும் நகரங்களில் உள்ள வளங்காப்பு மண்டலங்களில் பரவி அமைந்துள்ளது.
  • போஹாய் வளைகுடா என்பது வடகிழக்கு மற்றும் வட சீனாவின் கடற்கரையில் உள்ள மஞ்சள் கடலின் உள் பகுதியில் உள்ள வளைகுடா ஆகும்.
  • போஹாய் வளைகுடா லியாடோங் தீபகற்பம் (வடகிழக்கு) மற்றும் ஷான்டாங் தீப கற்பம் (தெற்கு) ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
  • முற்காலத்தில் இது மிளகாய் வளைகுடா அல்லது பேச்சிலி வளைகுடா என்று அழைக்கப் பட்டது.
  • மஞ்சள் கடல் ஆனது மேற்கு பசிபிக் பெருங்கடலின் விளிம்பில் அமைந்துள்ள ஒரு கடல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்