மஞ்சள் கடல்-போஹாய் வளைகுடாவை ஒட்டி காணப்படும் சீனாவின் வலசை போதல் பறவைகள் சரணாலயங்கள் (கட்டம் II) ஆனது, யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது ஹெபே, ஷான்டாங் மற்றும் லியோனிங் மற்றும் பிற மாகாணங்கள் மற்றும் நகரங்களில் உள்ள வளங்காப்பு மண்டலங்களில் பரவி அமைந்துள்ளது.
போஹாய் வளைகுடா என்பது வடகிழக்கு மற்றும் வட சீனாவின் கடற்கரையில் உள்ள மஞ்சள் கடலின் உள் பகுதியில் உள்ள வளைகுடா ஆகும்.
போஹாய் வளைகுடா லியாடோங் தீபகற்பம் (வடகிழக்கு) மற்றும் ஷான்டாங் தீப கற்பம் (தெற்கு) ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
முற்காலத்தில் இது மிளகாய் வளைகுடா அல்லது பேச்சிலி வளைகுடா என்று அழைக்கப் பட்டது.
மஞ்சள் கடல் ஆனது மேற்கு பசிபிக் பெருங்கடலின் விளிம்பில் அமைந்துள்ள ஒரு கடல் ஆகும்.