TNPSC Thervupettagam

மணல் சுரங்கங்கள் மீதான UNEP அறிக்கை

May 13 , 2019 1929 days 609 0
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டமானது (United Nations Environment Programme -UNEP) சமீபத்தில் மணல் சுரங்கம் மற்றும் அதன் நுகர்வு குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையானது “மணல் மற்றும் நிலைத்தன்மை : உலகளாவிய மணல் வளங்களின் சுற்றுச்சூழல் ஆளுமைக்கான புதிய தீர்வைக் கண்டறிதல்” எனும் தலைப்பில் வெளியானது.
  • இது வளர்ந்து வரும் மக்கள் தொகையில் மணல் நுகர்வு, தேவைகள் மற்றும் பங்கு ஆகியவற்றின் மாறிவரும் போக்கின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • இந்த அறிக்கையின்படி, ஆறுகள், ஏரிகள் மற்றும் கடற்கரையோரங்களில் மணல் அள்ளுவதன் மூலம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான பகுதிகளின் பட்டியலில் சீனா மற்றும் இந்தியா ஆகியவை முன்னணியில் உள்ளன.
  • ஐக்கிய நாடுகளின் புவியியல் ஆய்வின்படி உலகளாவிய சிமெண்ட் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு சீனாவிலும் (58.5%) இந்தியாவிலும் (6.6) நடைபெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்