TNPSC Thervupettagam

மணல் மற்றும் தூசிப் புயல்களை எதிர்ப்பதற்கான சர்வதேச தினம் – ஜூலை 12

July 13 , 2023 407 days 168 0
  • ஐக்கிய நாடுகள் சபையானது இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜூலை 12 ஆம் தேதியினை மணல் மற்றும் தூசிப் புயல்களை எதிர்த்துப் போராடுவதற்கான முதல் சர்வதேச தினமாக அறிவித்தது.
  • இந்தப் புயல்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றை எதிர்ப்பதற்கான சர்வதேச அளவிலான முயற்சிகளை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பலத்த காற்றானது, வெற்று அல்லது வறண்ட மண் உள்ள பகுதியை அடையும் போது, அதிக அளவு மணல் மற்றும் தூசியை வளிமண்டலத்தில் உயர்த்தச் செய்வதால் இந்தப் புயல்கள் ஏற்படுகின்றன.
  • இந்தக் கனிமத் தூசிகளின் முக்கிய மூலங்கள் வட ஆப்பிரிக்கா, அரேபியத் தீபகற்பம், மத்திய ஆசியா மற்றும் சீனாவில் உள்ள வறண்ட பகுதிகள் ஆகும்.
  • காடழிப்பு, அதிகப்படியான மேய்ச்சல் மற்றும் அதிகப்படியான அளவில் தண்ணீரைப் பயன்படுத்துதல் போன்ற மனித நடவடிக்கைகள் பல பாலைவனங்கள் பரவுவதற்கு காரணமாகின்றன மற்றும் மணல் மற்றும் தூசிப் புயல்கள் ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை அதிகரிக்கின்றன.
  • வட சீனாவில் மட்டும் மூன்றே ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் அளவில் பொருளாதார இழப்பை இவை ஏற்படுத்தியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்