வடகிழக்கு மலை மாநிலமான மணிப்பூரில் சுமார் இரண்டு ஆண்டுகளாக வன்முறை நிலவி வந்ததால், அரசியலமைப்பு நெருக்கடியைக் குறிப்பிட்டுக் காட்டி குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் அம்மாநிலம் கொண்டு வரப் பட்டுள்ளது.
1951 ஆம் ஆண்டிற்குப் பிறகு இம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அறிவிக்கப் படுவது இது 11வது முறையாகும்.
மணிப்பூரில் கடைசியாக குடியரசுத் தலைவர் ஆட்சி 2001 ஆம் ஆண்டு ஜூன் 02 ஆம் தேதி அன்று தொடங்கி, 277 நாட்கள் வரை நீடித்து 2002 ஆம் ஆண்டு மார்ச் 06 ஆம் தேதி அன்று முடிவடைந்தது.
1950 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு அமலுக்கு வந்ததிலிருந்து, குடியரசுத் தலைவர் ஆட்சி மொத்தம் 134 முறை விதிக்கப்பட்டுள்ளது.