மத்திய எரிசக்தி அமைச்சகம் பிரதமரின் சவுபாக்யா மின் திட்டத்தை மணிப்பூர் மாநிலத்தில் அறிமுகம் செய்துள்ளது.
சுமார் 1.75 இலட்சம் வீட்டுமனைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ளன. இதில் கிராமப்புறத்தில் 1.62 இலட்சம் வீடுகளும், நகர்ப்புறங்களில் 13 ஆயிரம் வீடுகளும் அடங்கும்.
இத்திட்டத்தின் கீழ் மணிப்பூர் மாநிலத்தின் மின்சாரக் கட்டமைப்புகளை (REC- Rural Electrification CorporationLimited) வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் இந்திய அரசாங்கம் நிதியுதவி அளிக்கும்.
மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஊரக மின்வசதியாக்க நிறுவனம் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனம் ஆகும்.
இத்திட்டத்தின் முகைமை பணிகளை இந்நிறுவனம் மேற்கொள்ளும்.
ஏழ்மையான நிலையில் உள்ள மக்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு இலவச மின் இணைப்பை பெறுவதற்கான பயனாளிகள் யார் யாரென்பது 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக பொருளாதார சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்படும்.