TNPSC Thervupettagam

மணிப்பூரில் மதுபானம் அறிமுகம்

December 21 , 2023 374 days 258 0
  • மணிப்பூர் மாநில அமைச்சரவையானது, 30 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு அம்மாநிலத்தில் மது விற்பனை மற்றும் நுகர்வை சட்டப்பூர்வமாக்கியுள்ளது.
  • மதுபானங்கள் தயாரிப்பு, உற்பத்தி, உடைமை, ஏற்றுமதி, இறக்குமதி, சரக்குப் போக்குவரத்து, கொள்முதல், விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவற்றுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • மணிப்பூர் மாநில பானங்கள் கழக லிமிடெட் (MSBCL) நிறுவனத்தையும் இது நிறுவியது.
  • தற்போது நடைபெற்று வரும் இன மோதல் மற்றும் போதைப்பொருள் மற்றும் மது ஆகியவற்றின் தவறானப் பயன்பாடுகளுக்கு எதிரான பிரச்சாரத்தின் மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • அம்மாநில அரசு ஆனது, இந்த சட்டப்பூர்வமாக்கல் மூலம் ஆண்டிற்கு 600-700 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது.
  • மணிப்பூர் அரசு 1991 ஆம் ஆண்டில் 'மணிப்பூர் மதுவிலக்கு சட்டத்தை' இயற்றியது என்பதோடு, கடந்த ஆண்டு அத்தடையை பகுதியளவு நீக்கவும் செய்தது.
  • பட்டியலிடப்பட்டச் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களுக்கு அவர்களின் பாரம்பரிய முறைகள் மற்றும் வழக்கமான பல்வேறு சட்டங்களின் கீழ் மதுபானம் காய்ச்சுவதற்கு இது விலக்கு அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்