TNPSC Thervupettagam

மணிப்பூர் - நாகாலாந்து எல்லைப் பிரச்சினை

April 26 , 2022 818 days 391 0
  • தெற்கு அங்காமி பொது மக்கள் அமைப்பானது, மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு  முழு அடைப்பினை அறிவித்தது.
  • சர்ச்சைக்குரிய கெசோல்ட்சா பகுதியில் இருந்து ஆயுதமேந்தியப் பணியாளர்கள் மற்றும் நிரந்தரக் கட்டமைப்புகளை திரும்பப் பெறுவதில் மணிப்பூர் அரசு தோல்வி அடைந்ததே இதற்கு ஒரு காரணமாகும்.
  • தெற்கு அங்காமி பொது மக்கள் அமைப்பு நாகாலாந்தின் ஒரு பழங்குடி அமைப்பாகும்.
  • நாகாலாந்தின் அங்காமிகளுக்கும், மணிப்பூரின் மாவோஸ் மற்றும் மராம்கள் ஆகிய மூன்று நாகா இனப் பழங்குடியினருக்கும் இடையிலான ஒரு பழைய நிலவுடைமைத் தகராறே இதற்கான மூலக் காரணம் ஆகும்.
  • கெசோல்ட்சா ஆனது, நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகியவற்றின் எல்லையில் உள்ள அழகிய சுகோ என்ற பள்ளத்தாக்கின் புறப்பரப்பில் அமைந்த அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு பகுதியாகும்.
  • சுகோ பள்ளத்தாக்கு முழுவதுமே நாகாலாந்திற்குச் சொந்தமானது என்று தெற்கு அங்காமி பொது மக்கள் அமைப்பே கூறினாலும், நாகலாந்து மாநில அரசு அவ்வாறு கோரவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்