சீனாவின் இலட்சியத் திட்டமான “மண்டலம் மற்றும் பாதை வழித்தட” (Belt and Road Initiative - BRI) உள்கட்டமைப்புத் திட்டத்தை இத்தாலி ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட முதலாவது மேற்கத்திய நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது.
சீனாவின் BRI திட்டத்தில் இணையும் G7 குழுவின் முதலாவது நாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பதிமூன்றாவது நாடு இத்தாலி ஆகும்.
இந்த ஒப்பந்தமானது வர்த்தகத்தில் இரு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடியதாக பார்க்கப்படுகின்றது. இத்தாலிக்கு அதிக அளவில் முதலீடுகள் தேவைப்படுகின்றன. அந்த முதலீடுகளை சீனா அளிக்க இருக்கின்றது.
மண்டலம் மற்றும் பாதை வழித்தடத் திட்டம்
BRI என்பது 152 நாடுகள் மற்றும் ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிக்க நாடுகளில் உள்ள சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றில் முதலீடுகள் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சியில் பங்கு கொள்ளும் சீன அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வளர்ச்சிசார் உத்தியாகும்.
இது ஒரு மண்டலம் ஒரு பாதை அல்லது பட்டுப் பாதை பொருளாதார மண்டலம் அல்லது 21 ஆம் நூற்றாண்டின் கடல்சார் பட்டுச் சாலை என்றும் அழைக்கப்படுகிறது.