TNPSC Thervupettagam

மண்டேலா பயிற்சித் திட்டம்

November 6 , 2018 2212 days 646 0
  • முன்னாள் தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவர் நெல்சன் மண்டேலாவை கௌரவப்படுத்தும் விதமாக இந்தியா உறுப்பினராக உள்ள, இந்தியப் பெருங்கடல் கரையோர அமைப்பு (Indian Ocean Rim Association - IORA) ஒரு பயிற்சித் திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது.
  • இந்த IORA அமைப்பிற்கான மூல காரண கர்த்தாவாக மண்டேலா பெரிதும் மதிக்கப்படுகின்றார்.
  • டர்பனில் நடந்த 18வது இந்தியப் பெருங்கடல் கரையோர அமைப்பின் கூட்டத்தின் இறுதியில் “IORA நெல்சன் மண்டேலா Be the Legacy” என்ற பயிற்சித் திட்டம் அறிவிக்கப்பட்டது.
  • இந்த திட்டம், IORA உறுப்பினர் நாடுகளிலிருந்து 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களை அவர்கள் தேர்ந்தெடுத்த கல்வித் துறையில் வேலை அனுபவத்துடன் அவர்களை மேம்படுத்திட எண்ணுகின்றது.

இந்தியப் பெருங்கடல் கரையோர அமைப்பு

  • IORA என்பது இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள கரையோர நாடுகளைக் கொண்டுள்ள சர்வதேச அமைப்பாகும். இதன் ஒருங்கிணைப்புச் செயலகம் மொரீசியஸின் எபேனேவில் அமைந்திருக்கின்றது.
  • இந்த அமைப்பு நெல்சன் மண்டேலாவின் தீர்க்க தரிசனத்தால், 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம், 14 உறுப்பு நாடுகள் கொண்ட பிராந்திய ஒத்துழைப்பிற்கான இந்தியப் பெருங்கடல் கரையோர சங்கமாக ஏற்படுத்தப்பட்டது.
  • தற்சமயம் இது 21 உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்