பாட்னா உயர் நீதிமன்றத்தின் தற்போதையத் தலைமை நீதிபதியான ஏ.பி. சாஹி என்பவர் மதராஸ் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றக் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
இவர் மதராஸ் உயர் நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதியாக இருக்கும் வினீத் கோத்தாரிக்குப் பதிலாக நியமிக்கப்பட இருக்கின்றார்.
கொலிஜியத்தின் தீர்மானத்தின் படி, திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தற்போதையத் தலைமை நீதிபதியான சஞ்சய் கரோல் என்பவர் நீதிபதி ஏ.பி. சாஹிக்குப் பதிலாக பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட இருக்கின்றார்.