TNPSC Thervupettagam

மதராஸ் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில்ரமணி

September 10 , 2019 1775 days 756 0
  • ஆகஸ்ட் 28ம் தேதியன்று, இந்தியாவின் தலைமை நீதிபதியின் தலைமையிலான ஐந்து மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றக் கொலிஜியமானது மதராஸ் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியான வி.கே. தஹில்ரமணியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப் பரிந்துரைத்தது.
  • இவருக்குப் பதிலாக மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான அஜய் குமார் மிட்டல் மதராஸ் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இதனை அடுத்து நீதிபதி தஹில்ரமணி தனது ராஜினாமாவை இந்தியக் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளார்.
  • இவர் 2001 ஆம் ஆண்டில் பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் பட்டார்.

  • இவர் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதத்தில் மதராஸ் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். இவர் 2020 ஆம் ஆண்டு  அக்டோபரில் பணியில் இருந்து ஓய்வு பெறவிருந்தார்.
  • காந்த குமாரி பட்நாகர் (1992/93) மற்றும் இந்திரா பானர்ஜி (2017/18) ஆகியோருக்குப் பிறகு மதராஸ் உயர் நீதிமன்றத்தின் 3வது பெண் தலைமை நீதிபதி தஹில்ரமணி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்