தற்போது சென்னை என்று அழைக்கப்படும் மெட்ராஸ் (மதராஸ்) நகரத்தின் ஸ்தாபன நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று மெட்ராஸ் தினமாக அனுசரிக்கப் படுகிறது.
மதராஸ் 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
இந்நாளில், சென்னப்பட்டினம் என்றழைக்கப்படும் இந்த நிலப்பகுதியானது, உள்நாட்டு நாயக்கர் ஆட்சியாளர்களிடமிருந்து பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் கையகப் படுத்தப் பட்டது.
மெட்ராஸ் தினமானது முதல் முறையாக 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்டது.