மதராஸ் தினமானது தமிழ் நாட்டில் உள்ள மதராஸ் நகரத்தின் நிறுவிய தினத்தை அனுசரிப்பதற்காக ஒருங்கிணைக்கப்படும் ஒரு நிகழ்ச்சியாகும். இத்தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதியானது தாமர்லா வெங்கடாத்திரி நாயக்கரிடமிருந்து ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவினால் சென்னப்பட்டினம் அல்லது மதராசப்பட்டினம் என்ற கிராமத்தை வாங்க ஒப்புக் கொள்ளப்பட்ட தேதியாகும்.
மதராஸ் வாரமானது பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 25 வரை அனுசரிக்கப் பட இருக்கின்றது.
மதராசை நிறுவிய தினத்தின் முதலாவது கொண்டாட்டமானது 1939 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
மதராஸ் தினக் கொண்டாட்டங்களைக் குறிப்பதற்கான சமீபத்திய கருத்தானது சென்னை பாரம்பரிய அமைப்பினால் 2004 ஆம்ஆண்டில் தொடங்கப்பட்டது.