TNPSC Thervupettagam

மதிகா சமூகத்திற்கான குழு

November 28 , 2023 236 days 306 0
  • மதிகா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டிற்கான துணைப் பிரிவாக்க அல்லது உள் ஒதுக்கீட்டு  செயல் முறையை விரைவுபடுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  • தெலுங்கு மொழியினைப் பேசும் சமூகத்தினரான மதிகா சமூகத்தினர் பெரும்பாலும் தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் வாழ்கின்றனர்.
  • இருப்பினும், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் மதிகா சமூகத்தினர் வாழ்கின்றனர்.
  • இந்த சமூகத்தினர் வரலாற்று ரீதியாக கைவினை, தோல் வேலைப்பாடுகள், தோல் பதனிடும் தொழில் மற்றும் வேளாண்மை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்.
  • இந்திய அரசாங்கம் ஆனது பட்டியலிடப்பட்ட சாதியினர் பிரிவில் இந்தச் சமூகத்தை வகைப்படுத்தியுள்ளது.
  • மதிகா சமூகத்தினருக்குள் பல்வேறு துணை சாதிகள் உள்ளன.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தில் (தெலுங்கானா உருவாக்கப்படுவதற்கு முன்பு) பட்டியலிடப்பட்ட சாதியினர் பிரிவில் மதிகா சமூகத்தினர் 48 சதவீதத்திற்கும் அதிகமானப் பங்கினைக் கொண்டிருந்தனர்.
  • மதிகா இட ஒதுக்கீட்டுப் போராட்ட சமிதி (MRPS) என்ற அமைப்பானது ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள எடுமுடி கிராமத்தில் 1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மந்த கிருஷ்ண மதிகா மற்றும் பிறர் தலைமையில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்