TNPSC Thervupettagam

மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா

January 8 , 2021 1422 days 943 0
  • மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவைச் சுற்றியுள்ள 1 கிலோ மீட்டர் பகுதியானது சுற்றுச்சூழல் தாங்கு மண்டலமாக (Eco-Sensitive Zones - ESZ) அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த அறிவிக்கையானது 1986 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் என்பதின் கீழ் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
  • மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவானது கேரளாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதிகளில்  அமைந்துள்ளது.
  • இது ஏலக்காய் மலைப் பகுதியின் அசல் காடுகளின் எஞ்சியுள்ள கடைசிப் பகுதியாக விளங்குகின்றது.
  • இது கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 2 மாநிலங்களுடன் தனது எல்லை வரம்பைப் பகிர்ந்துள்ளது.
  • நியூட்ரினோ ஆய்வு மையத்தின் கட்டமைப்பிற்காக குறிக்கப் பட்ட இந்த பகுதியானது தேனியில் உள்ளது.
  • இது மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
  • இந்தப் பகுதியானது ESZ ஆக அறிவிக்கப் படவில்லை.
  • ESZ அல்லது சுற்றுச்சூழலியல் ரீதியாக எளிதில் பாதிப்புக்குள்ளாக கூடிய பகுதிகள் என்பது பாதுகாக்கப்பட்ட பகுதிகள், தேசியப் பூங்காக்கள், மற்றும் வனவிலங்குச் சரணாலயங்களைச் சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் வரம்பிற்குள் உள்ள பகுதிகளாகும்.
  • ESZகளாக அறிவிக்கப் படுவதன் நோக்கம் இது போன்ற பகுதிகளைச் சுற்றிலும் ஏற்படும் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அவற்றை மேலாண்மை செய்தல் ஆகியவற்றின் மூலம்  அந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளைஅதிர்ச்சியைத் தாங்கக் கூடிய பகுதிகளாகஉருவாக்கப் படுதல் என்பதாகும்.
  • மேலும் இவை உயரிய பாதுகாப்புப் பகுதிகளிலிருந்து குறைந்த பாதுகாப்புப் பகுதிகளைப் பிரிக்கும் வகையில் ஒரு மாறுநிலை மண்டலமாக செயல்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்