TNPSC Thervupettagam

மதிப்பு பணவீக்கக் குறியீடு 2023/24

June 1 , 2024 47 days 157 0
  • 2024-25 ஆம் நிதியாண்டிற்கான மதிப்பு பணவீக்கக் குறியீடு (CII) ஆனது 363 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த நிதியாண்டில் இது 348 ஆகவும், 2022-23 ஆம் நிதியாண்டில் 331 ஆகவும் இருந்தது.
  • இது 4.3 சதவீத உயர்வைக் காட்டுகிறது.
  • மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) இந்தக் குறியீட்டை வெளியிட்டுள்ளது.
  • CII என்பது பணவீக்கத்தினை அதாவது, பல ஆண்டுகளாக ஒரு பொருள் அல்லது சேவையின் விலையில் பதிவான மதிப்பிடப்பட்ட அதிகரிப்பினை கணக்கிடச் செய்வதற்கான ஒரு வழிமுறையாகும்.
  • பணவீக்கத்தின் விளைவை நன்கு பிரதிபலிக்கும் வகையில் முதலீட்டின் கொள்முதல் விலையை ஈடு செய்ய இந்தக் குறியீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது.
  • அதிக கொள்முதல் விலை என்பது குறைந்த இலாபம், அதாவது குறைந்த வரியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்