2024-25 ஆம் நிதியாண்டிற்கான மதிப்பு பணவீக்கக் குறியீடு (CII) ஆனது 363 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் இது 348 ஆகவும், 2022-23 ஆம் நிதியாண்டில் 331 ஆகவும் இருந்தது.
இது 4.3 சதவீத உயர்வைக் காட்டுகிறது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) இந்தக் குறியீட்டை வெளியிட்டுள்ளது.
CII என்பது பணவீக்கத்தினை அதாவது, பல ஆண்டுகளாக ஒரு பொருள் அல்லது சேவையின் விலையில் பதிவான மதிப்பிடப்பட்ட அதிகரிப்பினை கணக்கிடச் செய்வதற்கான ஒரு வழிமுறையாகும்.
பணவீக்கத்தின் விளைவை நன்கு பிரதிபலிக்கும் வகையில் முதலீட்டின் கொள்முதல் விலையை ஈடு செய்ய இந்தக் குறியீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது.
அதிக கொள்முதல் விலை என்பது குறைந்த இலாபம், அதாவது குறைந்த வரியாகும்.