மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அவர்கள் இந்தியாவில் தேன் உற்பத்தித் திட்டத்தை மேம்படுத்த மது கிராந்தி தளம் மற்றும் இந்தியாவின் தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தையிடல் கூட்டமைப்பின் (NAFED) தேன் விற்பனை முனையங்களைத் தொடங்கி வைத்தார்.
மது கிராந்தித் தளமானது தேசிய தேனீக்கள் வாரியத்தின் முன்னெடுப்பாகும்.
இது தேசிய தேனி வளர்ப்பு மற்றும் தேன் உற்பத்தித் திட்டத்தின் கீழ் இயக்கப் படுகிறது.
மதுகிரந்தி தளம்
இத்தளமானது டிஜிட்டல் தளத்தில் தேனின் மூலப்பொருள் மற்றும் தேன் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் போன்றவற்றினைக் கண்டறிய உதவும்.
மேலும் தேனின் தரம் மற்றும் தேனில் கலப்படம் செய்ய பயன்படுத்தப்படும் மூலத்தைக் கண்டறியவும் இத்தளம் உதவும்.
தேன் உற்பத்தி, சந்தைப்படுத்துதல், தேனீ வளர்ப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் அனைத்துப் பங்குதாரர்களின் தகவல்களும் இத்தளத்தில் சேமிக்கப்படும்.
தேன்விற்பனைமுனையங்கள்
இவை தேன் விற்பனை செய்வதற்கான சிறப்பு முனையங்களாகும்.
இது NAFED அமைப்பால் இயக்கப் படுகிறது.
NAFED
NAFED என்பது இந்தியாவின் தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தையிடல் கூட்டமைப்பு (National Agricultural Cooperative marketing Federation) ஆகும்.
NAFED 14 முதல் 15 வரையிலான தேன் விற்பனை முனையங்களை உருவாக்கி உள்ளது.
மேலும் உருவாக்கப்பட உள்ள 200 முக்கிய NAFED கடைகளில், மேலும் பல தேன் விற்பனை முனையங்கள் உருவாக்கப்பட உள்ளன.
இது தேன் விற்பனைக்கான சந்தை சார்ந்த உதவியை வழங்கும்.
குறிப்பு
டிஜிட்டல் தளத்தை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப மற்றும் பங்குதாரர் வங்கி என்பது இந்தியன் வங்கியாகும்.
இத்தளத்தை இயக்குவதற்காக தேசிய தேனீக்கள் வாரியத்துடன் இந்தியன் வங்கி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.