இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது, 2023 ஆம் ஆண்டு 'உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (மதுபானங்கள்) முதல் திருத்த விதிமுறைகளை' வெளியிட்டுள்ளது.
இது 2024 ஆம் ஆண்டு மார்ச் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
இதன்படி, மதுபானத்தில் கிலோ கலோரி அலகில் உள்ள ஆற்றல் உள்ளடக்கத்தைத் தவிர விவரச் சீட்டில் ஊட்டச்சத்து குறித்த எந்தத் தகவல்களும் இருக்கக் கூடாது.
ஆற்றல் உள்ளடக்கம் தொடர்பான அத்தகைய அறிவிப்பும் தன்னார்வ அடிப்படையில் குறிக்கப் படலாம்.
2018 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (மதுபானங்கள்) விதிமுறைகளில், மதுபானப் புட்டிகளின் மீதான விவரச் சீட்டானது ஊட்டச்சத்து குறித்த எந்தத் தகவல்களையும் கொண்டிருக்கக் கூடாது என்று கூறப்பட்டது.