TNPSC Thervupettagam

மதுபானம் மற்றும் உடல்நலம் குறித்த உலகளாவிய நிலை அறிக்கை - 2018

September 26 , 2018 2157 days 614 0
  • மதுபானம் மற்றும் சுகாதார பற்றிய உலகளாவிய நிலை குறித்த அறிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது மதுபானம் அருந்துவதன் விரிவான நிலையை அளிக்கிறது.
  • மதுபானத்தின் அபாயகரமான உபயோகமானது 2016ம் ஆண்டில் சுமார் 3 மில்லியன் மரணங்களுக்கு காரணமாகியுள்ளது. (இது மொத்த இறப்புகளில் 3%) இதில் 2.3 மில்லியன் நபர்கள் ஆண்கள் என்றும் 0.7 மில்லியன் நபர்கள் பெண்கள் என்றும்  மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் 2005-ல் 2.4 லிட்டராக இருந்த தனிநபர் மதுபான நுகர்வானது 2016 ல் 7 லிட்டராக உயர்ந்துள்ளது.
  • 2025 ஆம் ஆண்டில் WHO (World Health Orgainzation) பிராந்தியங்களில் தனிநபர் (15 வயதிற்கு மேற்பட்டோர்) மதுபான நுகர்வானது 50% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அதிகபட்ச உயர்வானது இந்தியாவில் மட்டும் 2 லிட்டர் அதிகரிப்புடன் சேர்த்து தென் கிழக்கு ஆசியாவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • உலகளாவிய அளவில் மொத்த தனிநபர் நுகர்வானது 2005 ஆம் ஆண்டில்5 லிட்டர்களில் இருந்து 2010-ல் 6.4 லிட்டர் ஆக உயர்ந்தது. மேலும் இன்றும் 2016-ன் அளவான 6.4 லிட்டர் என்ற அளவிலேயே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்