மதராஸ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் முதல் பெண் சோப்தாராக (பணித்துறை முத்திரைக் கோள் ஏந்திச் செல்லும் அலுவலர்) T.லலிதா என்பவர் நியமிக்கப் பட்டு உள்ளார்.
அவர் நீதிபதி N.மாலா அவர்களுக்கான சோப்தாராக செயல்படுவார்.
உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தங்கள் அறைகளிலிருந்து நீதிமன்ற அரங்குகளுக்குச் செல்லும் போது அவர்களுக்குத் தடையின்றி வழி விடுவதை உறுதி செய்வதற்காக, நீதிபதிகளுக்கு முன்னால் சோப்தார் நடந்து செல்வார்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், மதராஸ் உயர்நீதிமன்றத்தில் முதல் பெண் சோப்தார் நியமிக்கப்பட்டார்.