மதுரை: தமிழ் நாட்டின் முதல் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான பூங்கா
July 16 , 2017 2826 days 1590 0
தமிழகத்தில் முதன்முறையாக சிறப்பு மற்றும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கான பிரத்யேக பூங்காவானது மதுரை மாநகராட்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. அடல் நகர்ப்புற மாற்றம் மற்றும் புதுப்பித்தல் இயக்கத்தின் (Atal Mission for Rejuvenation and Urban Transformation - AMRUT) ஒரு பகுதியாக மதுரையின் அழகர் கோவில் சாலையில்,பசுமையை அதிகரிக்க இந்தப் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளின் நண்பனாக (Disable Friendly Park) இந்தப் பூங்கா விளங்குகிறது. பிற குழந்தைகளுடனான தொடர்பின் போது சிறப்புக் குழந்தைகளுக்கு உண்டாகும் ஏக்கத்தினை போக்குவதற்கு உதவும் வகையில் இந்தப் பூங்கா வடிவமைக்கப் பெற்றுள்ளது.
மேலும் இந்தப் பூங்காவில் பெரியளவிலான மீன் தொட்டியும், சக்கர நாற்காலியினைப் பயன்படுத்தக் கூடிய விதமான கழிப்பறைகளும் அமையவுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் சமூக ஆர்வலர்களை ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.