மத்திய அமைச்சரவை குழு பொதுத்துறை நிறுவன நிதி அமைக்க ஒப்புதல்
October 31 , 2017 2619 days 915 0
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு 22 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளோடு ஆக்சிஸ் வங்கி, ITC ,எல் & டி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் உள்ளடங்கிய புதிய பங்குச்சந்தை வர்த்தக நிதி (Exchange Traded Fund - ETF ) ஒன்றை உருவாக்க அனுமதி அளித்துள்ளது.
இந்த நிதியானது பரஸ்பர நிதிகளைப் போன்றவை. மேலும் பல பங்குகளை உள்ளடக்கியவை . பாரத்-22 என்பது அரசால் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட பங்குச்சந்தை வர்த்தக நிதியாகும் . இது பங்கு விலக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.