மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை – 2023/24 சிறப்பம்சங்கள்
February 3 , 2023 815 days 486 0
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்துள்ளார்.
வருமான வரி செலுத்துவதற்கான தள்ளுபடி வரம்பானது ஆண்டிற்கு ரூ.7 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.
புதிய தனிநபர் வருமான வரிக் கட்டமைப்பின் கீழான வருமானப் படிநிலைகளானது, ஆறில் இருந்து ஐந்தாக மாற்றப் பட்டுள்ளது.
வரி விலக்கு வரம்பு ஆனது ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிதிநிலை அறிக்கையானது, இரயில்வே நிர்வாகத்திற்கான மூலதன முதலீட்டினை இதுவரை இல்லாத அளவில் ரூ. 2.40 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது.
நிதிப் பற்றாக்குறையானது 2023-24 ஆம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.9% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காகப் பெறப்படும் நிகரக் கடன்களின் மதிப்பு ரூ.11.8 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மூலதன முதலீட்டுச் செலவினமானது, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 33% அளவு அதிகரிக்கப் பட்டு அது ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3% ஆகும்.
கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்தை மையமாகக் கொண்டு, வேளாண் கடன்களுக்கான இலக்கு ரூ. 20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.
கிராமப்புறங்களில் உள்ள இளம் தொழில்முனைவோர்களின் வேளாண் சார்ந்த புத்தொழில்களை ஊக்குவிப்பதற்காக வேண்டி வேளாண் ஊக்குவிப்பு நிதி அமைக்கப் பட உள்ளது.
பிரதான் மந்திரி விஸ்வகர்மா கௌசல் சம்மான் இது பாரம்பரியக் கைவினைக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டப் பொருட்களின் தரம், அளவு மற்றும் பரவலை மேம்படுத்துவதற்கான முதல்-வகையான ஒரு தொகுப்பு உதவித் தொகை சார்ந்த முன்னெடுப்பு ஆகும்.
ஆற்றல் மாற்றம் மற்றும் நிகரச் சுழிய உமிழ்வு இலக்குகள் மற்றும் ஆற்றல் பாதுகாப்பை அடைவதற்கான முன்னுரிமை சார்ந்த மூலதன முதலீடுகளுக்காக இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ. 35,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள வறட்சியால் பாதிக்கப் படக்கூடியப் பகுதிகளில், நிலையான நுண்ணீர்ப் பாசன முறைகளின் பயன்பாட்டு ஊக்குவிப்புத் திட்டங்களுக்காக நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
பிரதான் மந்திரி PVTG மேம்பாட்டுத் திட்டமானது தொடங்கப்படுவதோடு, 740 ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் அதிக அளவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.