TNPSC Thervupettagam

மத்திய ஆசிய நாடுகளுடன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரின் சந்திப்பு

December 10 , 2022 590 days 246 0
  • இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனது சகப் பிரதிநிதிகளுடன் ஒரு சிறப்புச் சந்திப்பினை மேற்கொண்டார்.
  • கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் ஓர் உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டத்திற்காக டெல்லியில் கூடுவது இதுவே முதல் முறையாகும்.
  • இந்தியாவிற்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையேயான அரசுமுறை உறவுகள் நிறுவப் பட்டதன் 30வது ஆண்டு நிறைவை ஒட்டி இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
  • "இந்தியாவின் விரிவுபடுத்தப்பட்ட அண்டை நாட்டுப் பகுதி" மற்றும் "அமைதியான, பாதுகாப்பான, செழிப்பான" மத்திய ஆசியா நமது நாட்டின் பொது நலன் என்ற கருத்தில் இருப்பதால், மத்திய ஆசியாவிற்கு இந்தியா மிக உயர்ந்த முன்னுரிமையை வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்