மத்திய ஆசிய வலசைப் போக்கு வழித்தடத்தினுள் (CAF) எல்லை கொண்டுள்ள வலசைப் போகும் பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களுக்கான பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக ஒத்துழைப்பினை வழங்க முன்வந்துள்ளன.
ஆர்க்டிக் பெருங்கடலில் இருந்து இந்தியப் பெருங்கடல் வரையிலான 30 நாடுகளை உள்ளடக்கிய மத்திய ஆசிய வலசைப் போக்கு வழித்தடம் பறவைகளுக்கான முக்கிய வலசைப் போகும் வழித் தடமாகும்.
இது 400க்கும் மேற்பட்ட வலசைப் போகும் பறவையினங்களின் தாயகமாகும்.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆனது, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு/வலசைப் போகும் உயிரினங்களுக்கான உடன்படிக்கை (UNEP/CMS) உடன் இணைந்து சமீபத்தில் ஒரு சந்திப்பினை ஏற்பாடு செய்தது.
மொத்தம் 370 வகையான வலசைப் போகும் பறவைகள் இந்திய துணைக் கண்டத்திற்கு ஆண்டுதோறும் வருகை தருகின்றன.