TNPSC Thervupettagam

மத்திய கண்காணிப்புக் குழுவின் நாணயத்தன்மை குறியீடு

October 27 , 2017 2633 days 881 0
  • மத்திய கண்காணிப்புக் குழு (Central Vigilance Commission) 25 நிறுவனங்களுக்கான நாணயத்தன்மை குறியீட்டினை (Integrity Index) உருவாக்கவிருக்கிறது.
  • பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள், அமைச்சகங்கள் மற்றும் அதன் துறைகளுக்கு, மத்திய கண்காணிப்புக் குழு, நாணயத்தன்மை குறியீட்டினை உருவாக்க உள்ளது.
  • கண்காணிப்பிற்கான கூறுகளின் அடிப்படையில், மத்திய கண்காணிப்புக் குழுவானது பொது நிறுவனங்களின் மதிப்பெண்களை கணக்கிடும். இந்தக் கூறுகள், நீண்டகால திறன், லாபம், நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்.
  • இது உள்ளார்ந்த மற்றும் புறவெளி சூழல் அமைப்பினை உருவாக்கி, பொதுத்துறை நிறுவனங்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவும்.
  • துவக்கத்தில் 25 நிறுவனங்கள், இக்குறியீட்டின் உருவாக்கத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மத்திய கண்காணிப்புக் குழு (Central Vigilance Commission)
  • மத்திய கண்காணிப்பு ஆணையம் (CVC) என்பது ஓர் தன்னிச்சையான சட்டப்பூர்வ அமைப்பாகும். இது அரசாங்கத்தின் ஊழல்களை களைவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்