இந்தத் தினமானது 1944 ஆம் ஆண்டில் மத்திய கலால் மற்றும் உப்புச் சட்டம் நிறுவப் பட்டதை நினைவு கூரும் நாளாகும்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்படும் கலால் வரி மற்றும் உப்பு உற்பத்தி ஆகியவற்றினை ஒழுங்குபடுத்துவதற்காக இந்தச் சட்டமானது இயற்றப்பட்டது.
இந்தியாவில் மறைமுக வரிகளை நிர்வகிப்பதற்கான பொறுப்பு கொண்ட அமைப்பு மத்திய கலால் வரி மற்றும் சுங்க வாரியம் ஆகும்.