மத்திய சேமக் காவல் படை (CRPF) வீரர்களின் வீரம் மற்றும் தன்னலமற்றத் தியாகத்திற்கு இந்தத் தினம் கௌரவம் அளிக்கிறது.
இது 1965 ஆம் ஆண்டில் மத்திய சேமக் காவல் படை மற்றும் பாகிஸ்தான் படையினருக்கு இடையே நடைபெற்ற ஒரு முக்கியப் போரின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
மத்திய சேமக் காவல் படையின் சிறிய குழு ஒன்று எதிரிகளுடன் சண்டையிட்டு சுமார் 34 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றது.
1939 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதியன்று, மத்திய சேமக் காவல் படையானது அரசப் பிரதிநிதியின் காவல்துறையாக நடைமுறைக்கு வந்தது.
இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு, 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதியன்று, மத்திய சேமக் காவல் படைச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் இது மத்திய சேமக் காவல் படையாக மாறியது.