மத்திய தத்தெடுத்தல் வள ஆணையமானது (Central Adoption Resource Authority - CARA) தனது 5வது வருடாந்திர தினத்தைப் புது தில்லியில் கொண்டாடியது.
CARA என்பது உள்நாட்டுக் குழந்தைகள் தத்தெடுத்தலை ஊக்குவித்து அதனை மேற்பார்வையிடும் இந்திய அரசின் ஒரு உச்ச அமைப்பாகும்.
இது நாடுகளுக்கிடையேயான தத்தெடுப்பை ஒழுங்குபடுத்துவதற்காக நியமிக்கப் பட்ட ஒரு மத்திய ஆணையமாகச் செயல்படுகின்றது.
1993 ஆம் ஆண்டின் நாடுகளுக்கிடையேயான தத்தெடுப்புகள் குறித்த தி ஹேக் ஒப்பந்தமானது இந்திய அரசால் 2003 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015ன் விதிகளின் கீழ், 2016 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று CARA ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக அறிவிக்கப் பட்டது.
இது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.