மத்திய நிலத்தடி நீர் ஆணையம் - இந்திய அறிவியல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
September 9 , 2017 2634 days 929 0
மத்திய நீர்வளத்துறை, நதிமேம்பாடு மற்றும் கங்கைநதி புரைமைப்பு அமைச்சகத்தின் கீழுள்ள மத்திய நிலத்தடி நீர் ஆணையம் கர்நாடகாவில் நிலத்தடி நீரோட்ட மாதிரிகள் மேம்பாட்டிற்காகவும், நீர்த்தேக்க மேலாண்மைத் திட்டங்களை தயாரிப்பதற்காகவும் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்துடன் (IFSC) ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
நீர்த்தேக்க வரைபடமிடல் மற்றும் மேலாண்மைத் திட்டத்தை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியான இந்த மாதிரியானது ஏற்கெனவே உள்ள நிலத்தடிநீர் வள சூழ்நிலைகளைப் பற்றிய ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்தும்.
மேலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளுக்கு நிலத்தடிநீர் முறையின் எதிர்ச் செயலை கணிக்கும் முறையையும், பயனுள்ள மேலாண்மைத் திட்டங்களை உருவாக்குவதையும் இத்திட்டம் தனது நோக்கமாக கொண்டுள்ளது.