மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஏப்ரல் முதல் வாரத்திற்குள் நிறுவப்படும் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் அறிவித்தது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் கீழ் இந்த ஆணையம் உருவாக்கப் பட்டு வருகின்றது.
இந்தச் சட்டம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986க்குப் பதிலாக, மேலும் நுகர்வோர் கவலைகளை நிவர்த்தி செய்யும் அதன் நோக்கத்தை விரிவுபடுத்துகிறது.
பொருள் அல்லது சேவையின் தரம் அல்லது அளவு குறித்து தவறான தகவல்களை வழங்குதல், தவறான விளம்பரம் செய்தல் போன்ற குற்றங்களை புதிய சட்டம் கண்டுணர்கிறது.
பொருட்கள் மற்றும் சேவைகள் “ஆபத்தானவை, அபாயகரமானவை அல்லது பாதுகாப்பற்றவை” எனக் கண்டறியப் பட்டால் அதன் பின் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் இது குறிப்பிடுகிறது.