2025-2026 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையின் படி, மத்திய வரிகளில் தமிழ்நாடு மாநிலமானது அதிகப் பங்குகளைப் பெற உள்ளது.
15வது நிதி ஆணையத்தினால் பரிந்துரைக்கப்பட்ட படி, மத்திய வரிகளில் தமிழ்நாடு மாநிலத்தின் பங்கு 4.079% ஆகும்.
ஆரம்ப மதிப்பீடுகளில் 50,873.76 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட மத்திய வரிகளில் இந்த மாநிலத்திற்கான பங்கானது, 2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளில், சுமார் 52,491.88 கோடி ரூபாயாக அதிகரிக்கப் பட்டு உள்ளது.
2025-2026 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் மத்திய வரிகளில் தமிழ்நாட்டின் பங்கு 58,021.50 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2023-2024 ஆம் ஆண்டு முதல் மாநிலங்களுக்கு 3% நிதிப் பற்றாக்குறையானது (மொத்த வரவுகளுக்கும் மொத்த செலவினங்களுக்கும் இடையிலான வேறுபாடு) வரம்பானது அனுமதிக்கப் பட்டது.
மின்சாரத் துறைச் சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்காக 2021-22 முதல் 2024-25 ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.5% கூடுதலாகக் கடன் வாங்க அனுமதிக்கப்பட்டது.