TNPSC Thervupettagam

மத்தியக் கலால் தினம் - பிப்ரவரி 24

February 25 , 2020 1738 days 480 0
  • மத்தியக் கலால் மற்றும் உப்புச் சட்டம், 1944 இயற்றப் பட்டதைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்தத் தினமானது கொண்டாடப் படுகின்றது.
  • மத்தியக் கலால் மற்றும் சுங்க வாரியமானது (Central Board of Excise and Customs - CBEC) நாடு முழுவதும் மத்தியக் கலால் தினத்தைக் கொண்டாடியது.
  • மத்தியக் கலால் மற்றும் சுங்க வாரியம் என்பது மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த் துறையின் ஒரு பகுதியாகும்.
  • இந்த வாரியமானது சுங்கச் சட்டம், 1962, சுங்க கட்டணச் சட்டம், 1975, மத்திய கலால் சட்டம், 1944 மற்றும் சேவை வரிச் சட்டம் ஆகியவற்றைக் கையாள்கின்றது.
  • இருப்பினும்,  2017 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax - GST) உருவாக்கப்பட்ட பிறகு, இந்த வாரியத்தின் நடவடிக்கைகள் GST தொடர்பான சட்டங்களால் வழி நடத்தப் படுகின்றன.

இது பற்றி

  • முன்னதாக மத்திய கலால் மற்றும் சுங்க வாரியமானது மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் என்று அழைக்கப்பட்டது.
  • சுங்கம் தொடர்பான சட்டங்களை நிர்வகிப்பதற்காக சுங்க மற்றும் மத்திய கலால் / மத்திய GST துறையானது 1855 ஆம் ஆண்டில் அப்போதைய இந்தியாவின் தலைமை ஆளுநரால் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்