TNPSC Thervupettagam

மத்தியக் கொள்கைக் குழுவின் “வழிகாட்டி இந்தியா” திட்டம்

August 24 , 2017 2650 days 909 0
  • “வழிகாட்டி இந்தியா” (‘Mentor India’) எனும் திட்டத்தை மத்திய கொள்கைக் குழு துவங்கியுள்ளது.
  • இத்திட்டத்தின் வாயிலாக தேசத்தின் பல்வேறு தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மாணவர்களுக்கு ஆலோசனையும் வழிகாட்டுதலும் வழங்குவார்கள் .
  • நாடு முழுவதும் அடல் புத்தாக்க திட்டத்தின் (Atal Innovation Mission) கீழ் துவங்கப்பட்ட 900 அடல் மேம்படுத்துதல் ஆய்வகங்கள் இதற்காக பயன்படுத்தப்படும்.
  • இத்திட்டத்தின் மூலம் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் , மாணவர்களின் சிந்தைகளை வளர்க்கவும் அவர்களுக்கு வழிகாட்டவும் செய்வார்கள்.
  • மாணவர்கள் சிந்தனை மற்றும் செயல்களுக்கு பரிந்துரை செய்வதோடு அல்லாமல், அதனை நடைமுறைப்படுத்த உடனிருந்து உதவி புரிவார்கள் .
    அடல் மேம்படுத்துதல் ஆய்வகங்கள் (Atal Tinkering Labs)
  • அடல் மேம்படுத்துதல் ஆய்வகங்கள் என்பது ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்கள் தங்கள் புத்தாக்க திறன்களை வளர்த்துக் கொள்ளவும், புதிய கருத்துகளை மேம்படுத்திக்கொள்ளவும் உருவகபட்ட ஆய்வகங்கள் ஆகும்.
  • முப்பரிமான அச்சுப்பொறிகள்(3D printers) , ரோபாட்டிக்ஸ் மற்றும் மின்னணு மேம்பாட்டுக் கருவிகள் போன்ற அதிநவீனவசதிகளுடன் இந்த ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்