தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் சம்மக்கா சரக்கா மத்திய பழங்குடியினர் பல்கலைக் கழகத்தினை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
தெலுங்கானாவில் உள்ள மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகத்திற்கு பழங்குடியின தெய்வங்களான சம்மக்கா மற்றும் சரக்கா ஆகியோரின் நினைவாக பெயரிடப் படுகிறது.
சம்மக்கா சரக்கா ஜாதரா உலகின் மிகவும் பிரபலமானப் பழங்குடி திருவிழாக்களில் ஒன்றாகும்.
ஆந்திரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் சாராத சமூகங்களைச் சேர்ந்த சுமார் 1.5 கோடி பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
இது பெரும்பாலும் பழங்குடியினரின் கும்பமேளா என்று குறிப்பிடப் படுகிறது.