மத்தியப் பிரதேச மாநில அரசானது நிவாரி என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
நிவாரி மத்தியப் பிரதேசத்தின் 52வது மாவட்டம் ஆகும். இது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று நடைமுறைக்கு வந்தது.
திகம்கார்க் மாவட்டத்திலிருந்து ஒரு பகுதியைப் பிரித்து நிவாரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
நிவாரி மாவட்டமானது தற்போதைய திகம்கார்க் மாவட்டத்தின் 3 வட்டங்களை (tehsil) உள்ளடக்கியது ஆகும். நிவாரி, ஓர்ச்சா மற்றும் பிருத்விபூர் ஆகியவை அந்த 3 வட்டப் பகுதிகளாகும்.
புதிய மாவட்டமான நிவாரியின் முதலாவது ஆட்சியராக அக்ஷய்குமார் சிங் (பொறுப்பு ஆட்சியர்) பதவி வகிப்பார்.