TNPSC Thervupettagam

மத்தியப் பிரதேசம் - தேசியச் சுற்றுலா விருதுகள்

October 11 , 2022 649 days 368 0
  • 2018-19 ஆம் ஆண்டு 'தேசியச் சுற்றுலா விருதுகளின்' கீழ் 8 வெவ்வேறு பிரிவுகளில் மத்தியப் பிரதேசம் விருதுகளை பெற்றது.
  • நாட்டின் தூய்மையான நகரமான இந்தூர் - 'இந்தியாவில் சுற்றுலாத் தலத்தின் முறையான மேலாண்மை' (வகை A) விருதை வென்றது.
  • 'ஸ்வச் சுற்றுலாத் தலம் - மேற்கு மண்டலம்' என்ற பிரிவில் உஜ்ஜயின் மாநகராட்சிக் கழகம் விருதினைப் பெற்றது.
  • போஜ்பூரில் உள்ள ஷிவ் மந்திர் - 'சிறந்த நோக்கம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் அமைந்த நினைவுச் சின்னம்' என்ற பிரிவில் விருதினை வென்றுள்ளது.
  • இந்தூரில் உள்ள தேவி அஹில்யா பாய் விமான நிலையமானது, ‘இந்தியாவின் மற்றப் பகுதிகளை ஒப்பிடச் செய்கையில் - 'சிறந்த விமான நிலையம்' தொடர்ந்து மூன்றாவது முறையாக விருதினை வென்றுள்ளது.
  • மால்வாவின் சுவரோவியமானது, ' இந்தி மொழி வெளியீட்டில் சிறந்து விளங்குதல்' என்ற பிரிவில் விருதினை வென்றுள்ளது.
  • போபால் சிற்றேடு - சிறந்தச் சுற்றுலா மேம்பாட்டு விளம்பரப் பொருள் என்ற பிரிவில் விருதினை வென்றுள்ளது.
  • பென்ச் புலிகள் காப்பகத்தின் வழிகாட்டியான சுபாஷ் பாவ்ரே - 'சிறந்த வனவிலங்கு வழிகாட்டி, மேற்கு - மத்திய மண்டலம்' என்ற பிரிவில் விருதினை வென்றுள்ளார்.
  • 'கோட்யார்ட் ஹவுஸ்', மாண்ட்லா மாவட்டத்தில் உள்ள கன்ஹா தேசியப் பூங்காவில் உள்ள பட்பரா கிராமத்தின் தங்குமிட வசதி - மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வியத்தகு இந்தியா இரவு நேர விடுதி மற்றும் காலை உணவு நிறுவனங்கள்' என்ற பிரிவில் விருதினை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்