மத்திய அரசானது, சட்ட விசாரணை நிறுவனங்களுக்கான சர்வதேச ஒத்துழைப்பைச் சீரமைப்பதற்காக ‘BHARATPOL’ இணைய தளத்தினைத் துவக்கியுள்ளது.
BHARATPOL என்பது சர்வதேச காவல் துறை ஒத்துழைப்பு மூலம் முக்கிய பன்னாட்டுக் குற்றங்களுக்கு எதிரான உதவி மற்றும் நிகழ்நேர நடவடிக்கைக்கான தகவல் பரப்பு மையமாகும்.
இது மத்தியப் புலனாய்வு அமைப்பு (CBI) மூலம் உருவாக்கப்பட்டது.
மத்திய மற்றும் மாநில முகமைகள் சர்வதேச காவல் துறையுடன் எளிதாக தொடர்பு கொள்ளவும், அவர்களின் விசாரணைகளை விரைவுபடுத்தவும் இது வழி வகுக்கும்.
இந்த இணைய தளமானது, CBI அமைப்பு மற்றும் சர்வதேச காவல் அமைப்பினை (NCB - புது டெல்லி) இந்தியாவில் உள்ள அனைத்துச் சட்ட அமலாக்க ஆணையங்களுடன் ஒருங்கிணைக்கிறது.
BHARATPOL ஆனது இணைப்பு, சர்வதேச காவல் துறையின் அறிக்கைகள், குறிப்புகள், தகவல் ஒளிபரப்பு மற்றும் மூலங்கள் என ஐந்து முக்கிய மாதிரிகளைக் கொண்டு உள்ளது.