TNPSC Thervupettagam

மத்ஸ்ய சேவா கேந்திரங்கள் மற்றும் சாகர் மித்ராக்கள்

December 29 , 2024 61 days 87 0
  • மத்ஸ்ய சேவா கேந்திராக்கள் மற்றும் சாகர் மித்ராக்கள் ஆகியன உற்பத்தித் திறன் மற்றும் நிலைத் தன்மையை மேம்படுத்துவதற்கான முக்கிய ஆதரவு, பயிற்சி மற்றும் தகவல்களை வழங்குவதன் மூலம் மீனவர்களுக்கு உதவுகின்றன.
  • 2013-14 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவின் தேசிய மீன் உற்பத்தி 83% அதிகரித்து, 2022-23 ஆம் ஆண்டில் 175 லட்சம் டன் என்ற அதிகபட்ச அளவினை எட்டியுள்ளது.
  • இதில் 75% ஆனது உள்நாட்டு மீன்வளத்திலிருந்து உற்பத்தியாகிறது.
  • உலக அளவில் மீன் மற்றும் மீன் வளர்ப்பு உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது.
  • ‘மத்ஸ்ய சேவா கேந்திராக்கள்’ (MSK), நன்கு பயிற்சி பெற்ற மீன்வளர்ப்பு நிபுணர்களால் பலவிதமான பல்துறை சேவைகளை வழங்குவதற்கான ஒரு ஒற்றைத் தீர்வாகக் கருதப் படுகிறது.
  • பெண்கள் மற்றும் மிகவும் நலிவடைந்த பிரிவினர்கள் இத்தகைய மையங்களை அமைப்பதற்கான உதவியில் அரசின் பங்கு 60% ஆக உள்ளது.
  • கடலோர மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள “சாகர் மித்ராக்கள்” அரசாங்கத்திற்கும் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கும் இடையே ஒரு முக்கிய இடைமுகமாகப் பங்காற்றுகிறது.
  • அவை தினசரி கடல் மீன்பிடித்தல், விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் மீன் இறக்கு மையங்கள்/துறைமுகங்களில் தேவையானச் சந்தைப்படுத்துதல் தேவைகள் பற்றிய தகவல் மற்றும் தரவுகளை தொகுத்து வழங்குகின்றன.
  • அவை உள்ளூர் விதிமுறைகள், வானிலை முன்னறிவிப்புகள், இயற்கைச் சீற்றங்கள், சுகாதாரமான முறையில் மீன்களைக் கையாளுதல், மற்றும் கடலில் சாத்தியமான மீன்பிடி மண்டலங்கள் பற்றியத் தகவல்களை மீனவர்களுக்குப் பரப்புகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்