அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் தனது எண்ணங்களைப் பயன்படுத்தி தனது கையினை நகர்த்தக் கூடிய ஒரு தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளார்.
அமெரிக்கப் பாதுகாப்பின் மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சித் திட்ட நிறுவனத்திடமிருந்து (US Defence Advanced Research Projects Agency - DARPA) 20 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் இவருக்கு வழங்கப்பட்டது.
இந்த அமைப்பிறகு “ப்ரெய்ன்ஸ்டோர்ம்ஸ்” (காந்த மின்னியல் சமிக்ஞைகளை அனுப்பும் அல்லது பெறும் மூளை அமைப்பு) என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஒரு வீரர் ஒரு தலைக் கவசம் அணிந்து கொண்டு பல ஆளில்லா வான்வழி வாகனங்களைக் கட்டுப்படுத்த அல்லது வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்ய தனது மனதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு நுண் ஆற்றல் மாற்றி தற்காலிகமாக ஊசி மூலமாக உடலினுள் செலுத்தப்படும். இதன் மூலம் தலைக் கவசத்தை அடிப்படையாகக் கொண்ட உள்வாங்கியுடன் (transceiver) மூளை தொடர்பு கொள்ளும்.