TNPSC Thervupettagam

மனித ஆரோக்கியத்தின் மீது மண்ணில் உள்ள நுண்ணூட்டச் சத்துகளின் தாக்கம்

September 1 , 2023 325 days 217 0
  • இந்திய மக்களின் ஆரோக்கியத்துடன் நன்கு தொடர்புடைய மண்ணின் நுண்ணூட்டச் சத்துக்கள் என்ற தலைப்பிலான கட்டுரை சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • நாட்டில் 35 சதவீதத்துக்கும் அதிகமான மண்ணில் துத்தநாகக் குறைபாடு இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • சுமார் 11 சதவீதம் பேருக்கு இரும்புச்சத்து குறைபாடு இருப்பதாக மதிப்பிடப் பட்டு உள்ளது.
  • மண்ணில் துத்தநாகம் அதிக அளவு காணப்படும் பகுதிகளில் குழந்தைகளில் வளர்ச்சி குன்றிய நிலை மற்றும் எடை குறைந்த கொண்ட நிலை போன்ற பாதிப்புகள் குறைந்த விகிதங்களைக் கொண்டுள்ளன.
  • மண்ணிலுள்ள துத்தநாகம் பெண்களின் உயரம் அதிகரிப்பில் ஒரு பெரும் பங்கினை வகிக்கிறது.
  • மண்ணிலுள்ள இரும்பு என்பது, பெண்களிடையே இரத்த சோகை, குழந்தைகள் மற்றும் பெண்களின் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவுகளுடன் மிகப் பெரும் தொடர்புடையதாகும்.
  • உலக மக்கள்தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கு அளவிலான மக்கள் இந்தியாவில் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்