TNPSC Thervupettagam

மனித உரிமைகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மைல்கற்கள்

December 19 , 2024 3 days 38 0
  • மனித உரிமைகளுக்கான ஒன்றிய சங்கம் (UAHR) ஆனது, ஐக்கிய அரபு அமீரகம் மனித உரிமைகளில் கண்டுள்ள அதன் முன்னேற்றத்திற்காக அதனைப் பாராட்டியுள்ளது.
  • இது 2024 ஆம் ஆண்டிற்கானப் பாலினச் சமத்துவமின்மை குறியீட்டில் உலக அளவில் ஏழாவது இடத்தையும், பிராந்திய அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது.
  • தொழிலாளர்-நிறுவன மோதல்கள் இல்லாத நாடுகள் குறியீட்டிலும் இந்த நாடானது உலகிலேயே முன்னணியில் உள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில், கல்வி மற்றும் வீட்டுவசதி ஆகியவை அரசியலமைப்பு உரிமைகள் ஆக உள்ளன; அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது; மற்றும் மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை ஆதரிக்கும் விதமாக ஒரு சமூக நல அமைப்பு அமைக்கப் பட்டு உள்ளது.
  • அந்நாட்டின் சட்டமானது, பாகுபாட்டிலிருந்து மக்களைப் பாதுகாத்து, வாழ்வதற்கான உரிமை, பாதுகாப்பு, நம்பிக்கை சுதந்திரம் மற்றும் மத நடைமுறைகளுக்குப் பெரும் உத்தரவாதம் அளிக்கிறது.
  • குழந்தைகள், பெண்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் (மிக உறுதியானவர்கள்) மற்றும் பிற எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் உரிமைகள் மீதும் அந்நாட்டின் அரசியலமைப்பு சிறப்பு கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்