ஆண்டுதோறும் உலகம் முழுவதும் டிசம்பர் 10-ஆம் தேதி உலக மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகின்றது.
உலகின் முதல் மனித உரிமைகளைப் பற்றிய விளக்க கூற்றான உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் (Universal Declaration of Human Rights - UDHR) 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி ஐ.நா.அவையின் பொது அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதனை குறிக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகின்றது.
2017ஆம் ஆண்டிற்கான உலக மனித உரிமைகள் தினத்தின் கருத்துரு – சமத்துவம், நீதி மற்றும் மனித கண்ணியத்திற்கு ஒன்றுபட்டு எழுவோம் (Let’s stand up for equality, justice and human dignity).
இவ்வருடம் ஐ.நா.வின் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 70-வது ஆண்டு நிறைவை குறிக்கும் விதமாக ஆண்டு முழுவதுமான மனித உரிமைகள் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் பாரம்பரிய வழக்கமாக ஆண்டுதோறும் டிசம்பர் 10-ஆம் தேதி தான் ஐந்தாண்டு இடைவெளிகளில் வழங்கப்பெறும் மனித உரிமைகள் தொடர்பான களத்தின் ஐ.நா.விருதும், நோபல் அமைதிப் பரிசும் வழங்கப்படுகின்றது.