இந்த ஆண்டு இத்தினத்தின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
பாலினம், தேசியம், இனம், மதம் அல்லது பின்புலத்தைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு தனி நபருக்குமான அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை ஊக்குவிப்பதையும் கொண்டாடுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 1948 ஆம் ஆண்டில் மனித உரிமைகளுக்கான உலகளாவியப் பிரகடனத்தை (UDHR) ஏற்றுக்கொண்டது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'அனைவருக்குமான சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி' என்பதாகும்.