TNPSC Thervupettagam

மனித உரிமைகள் தினம் – டிசம்பர் 10

December 13 , 2021 988 days 418 0
  • இத்தினமானது 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று ஐக்கிய நாடுகள் அமைப்பினால் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது முதல் ஆண்டு தோறும் அனுசரிக்கப் பட்டு வருகிறது.
  • இந்தத் தினமானது நம் அனைவருக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்தத் தினமானது உலகெங்கிலுமுள்ள மனித உரிமைகளின் ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “EQUALITY – Reducing inequalities, advancing human rights” (சமத்துவம் – சமத்துவமின்மையைக் குறைத்து மனித உரிமையை மேம்படுத்துதல்) என்பதாகும்.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துருவான “சமத்துவம்” மற்றும் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் 1வது பிரிவான அனைத்து மனிதர்களும் சுதந்திரத்துடனும், கண்ணியம் மற்றும் உரிமைகள் போன்றவற்றில் சமத்துவத்துடனும் பிறந்த மனிதர்கள் என்பவைகளுடன் தொடர்புடையதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்