தெற்கு ஆசியாவில் உள்ள தண்டனைகள், விலக்கல்கள் (Impunity) மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளைக் களைவதற்கு மனித உரிமைகள் மீதான சர்வதேச கருத்தரங்கை (International Conference on Human Rights) நேபாளம் விரைவில் நடத்த உள்ளது.
பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், மலேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, வங்கதேசம் உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த 50 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கு பெற உள்ளனர்.
”சவால்களை அடையாளம் காணல் மற்றும் முன்னேற்றத்தை மதிப்பிடல்; தெற்கு ஆசியாவில் தண்டனை விலக்குகள் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகளை களைதல்” ('Identifying challenges and assessing progress: addressing impunity and human rights in South Asia) என்பதை கருப்பொருளாகக் கொண்டு நேபாளத்தின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission-NHRC) இந்த 3 நாள் சர்வதேச மாநாட்டை நடத்த உள்ளது.
தண்டனை விலக்கல்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் மீதான தீவிர விவாதங்களின் மூலம் இம்மாநாட்டின் இறுதியில் “காத்மண்டு பிரகடனம்” (Kathmandu Declaration) ஒன்றும் இம்மாநாட்டில் வெளியிடப்பட உள்ளது.