TNPSC Thervupettagam

மனித உரிமைகள் மீதான சர்வதேச மாநாடு

April 9 , 2018 2421 days 764 0
  • தெற்கு ஆசியாவில் உள்ள தண்டனைகள், விலக்கல்கள் (Impunity)  மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளைக் களைவதற்கு மனித உரிமைகள் மீதான சர்வதேச கருத்தரங்கை  (International Conference on Human Rights)  நேபாளம் விரைவில் நடத்த உள்ளது.
  • பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், மலேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, வங்கதேசம் உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த 50 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கு பெற உள்ளனர்.
  • ”சவால்களை அடையாளம் காணல் மற்றும் முன்னேற்றத்தை மதிப்பிடல்; தெற்கு ஆசியாவில் தண்டனை விலக்குகள் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகளை களைதல்” ('Identifying challenges and assessing progress: addressing impunity and human rights in South Asia) என்பதை கருப்பொருளாகக் கொண்டு நேபாளத்தின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission-NHRC) இந்த 3 நாள் சர்வதேச மாநாட்டை நடத்த உள்ளது.
  • தண்டனை விலக்கல்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் மீதான தீவிர விவாதங்களின் மூலம் இம்மாநாட்டின் இறுதியில் “காத்மண்டு பிரகடனம்” (Kathmandu Declaration) ஒன்றும் இம்மாநாட்டில்  வெளியிடப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்